Friday, September 18, 2020

 கடவுளைக் காண முடியுமா???


மெய்யான இந்துமதம் கூறும் விளக்கம் என்ன?

மற்ற மதங்கள் கூறும் விளக்கம் என்ன?

19/9/2020
ஓம் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் சித்தர் அரசயோகிக் கருவூறார் அருளியது.

கடவுளைக் காண முடியுமா?

மற்ற மதங்கள் கூறுவது,
கடவுள் என்பவர் எளிதில் காணமுடியாத இடத்தில் இருப்பவர்.
கடவுளைக் காண்பது என்பது இயலவே இயலாத ஓன்று;
கடவுள் மனிதர்களின் தவறுகளுக்குத் தண்டனை விதிக்கவும்,நன்மைகளுக்குப் பரிசளிக்கவுமே மேலோகத்திலிருக்கின்ற ஓர் அரசர்.
கடவுளுடைய வடிவத்தையோ,வண்ணத்தையோ,
இருப்பிடத்தையோ எவருமே கண்டுபிடிக்க இயலாது.

கடவுளை நம்பி வழிபட்டு அவருடைய
புகழைப் பரப்புவதன் மூலம் தான்
மனிதன் தன்னுடைய துன்பத்தையும்,
பாவத்தையும் போக்கிக் கொள்ளமுடியும்.

மெய்யான இந்துமதம் கூறுவது,
பதினெண்சித்தர்களுடைய சித்தர்நெறியெனும் சீவநெறியான மெய்யான இந்துமதத்தின் செயலாக்கத்தால், இம்மண்ணுலகின்
பரந்து விரிந்துபட்ட கோடிக்கணக்கான மக்களில் எத்தனை பேர் மெய்யான பக்குவம் பெற்று கடவுளை வருந்தி அழைத்தாலும் அத்தனை பேருக்கும்
உடனடியாக ஓடோடி வந்து உறுதுணையாக விளங்கிடும் வண்ணம் கோடிக் கடவுள்கள் இருக்கின்றார்கள் . எனவே குறிப்பிட்ட ஓரே ஓரு கடவுளை மட்டும் தான் வழிபட்டே ஆகவேண்டும் என்ற நிலை என்றைக்குமே அருளுலக்கு இல்லை! இல்லை! இல்லை!
இல்லவேஇல்லை!!!

மேலும் பதினெண்சித்தர்களின் அருளுலகத் தத்துவம் தான் மிகமிகத்
தெளிவாக மனிதர்கள் கடவுளாவது
போல்,கடவுள்களும் மனிதர்களாகப்
பிறப்பெடுக்கிறார்கள் என்ற மாபெரும் பேருண்மையினை விளக்குகிறது.

இதன்மூலம்,எப்பொழுதுமே கடவுள்களுக்கிடையில் புதிதாகக்
கடவுளாகிட்ட மனிதர்களும்;
மனிதர்களுக்கிடையில் புதிதாக
மனிதர்களாகப் பிறந்திட்ட கடவுள்களும் இருக்கிறார்கள் என்ற பயன்மிக்க சுவையான பேருண்மை தெளிவாக்கப்படுகிறது.

இதனால் கடவுள்களுக்கும்,மனிதர்களுக்கும் இடையில் மிகமிக நெருக்கமான
உறவுநிலைகளும் உரிமைநிலைகளும் பசுமையாக வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றது என்பது தெளிவாகிறது.இத்தெளிவினால்
கடவுளைப்பற்றிய தவறான கற்பனைகளும்,அச்சங்களும்,
கூச்சங்களும்,ஆச்சரியங்களும்,
மாச்சரியங்களும் அகற்றப்படுகின்றன!
அகற்றப்படுகின்றன!!
அகற்றப்படுகின்றன!!!

🚩ஓம்திருச்சிற்றம்பலம்ஓம்🔱

🌷ஓம் குரு வாழ்க!
⚘ஓம் குருவே எல்லாம்!
🌱ஓம் குருவே துணை!
🙏ஓம் குருவே சரணம்!
💐ஓம் குருவே போற்றி!
🔱சித்தர்நாவல்மரத்தடியார்
கருவூர்
8973441303

No comments:

Post a Comment