Friday, September 18, 2020

 கடவுளைக் காண முடியுமா???


மெய்யான இந்துமதம் கூறும் விளக்கம் என்ன?

மற்ற மதங்கள் கூறும் விளக்கம் என்ன?

19/9/2020
ஓம் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் சித்தர் அரசயோகிக் கருவூறார் அருளியது.

கடவுளைக் காண முடியுமா?

மற்ற மதங்கள் கூறுவது,
கடவுள் என்பவர் எளிதில் காணமுடியாத இடத்தில் இருப்பவர்.
கடவுளைக் காண்பது என்பது இயலவே இயலாத ஓன்று;
கடவுள் மனிதர்களின் தவறுகளுக்குத் தண்டனை விதிக்கவும்,நன்மைகளுக்குப் பரிசளிக்கவுமே மேலோகத்திலிருக்கின்ற ஓர் அரசர்.
கடவுளுடைய வடிவத்தையோ,வண்ணத்தையோ,
இருப்பிடத்தையோ எவருமே கண்டுபிடிக்க இயலாது.

கடவுளை நம்பி வழிபட்டு அவருடைய
புகழைப் பரப்புவதன் மூலம் தான்
மனிதன் தன்னுடைய துன்பத்தையும்,
பாவத்தையும் போக்கிக் கொள்ளமுடியும்.

மெய்யான இந்துமதம் கூறுவது,
பதினெண்சித்தர்களுடைய சித்தர்நெறியெனும் சீவநெறியான மெய்யான இந்துமதத்தின் செயலாக்கத்தால், இம்மண்ணுலகின்
பரந்து விரிந்துபட்ட கோடிக்கணக்கான மக்களில் எத்தனை பேர் மெய்யான பக்குவம் பெற்று கடவுளை வருந்தி அழைத்தாலும் அத்தனை பேருக்கும்
உடனடியாக ஓடோடி வந்து உறுதுணையாக விளங்கிடும் வண்ணம் கோடிக் கடவுள்கள் இருக்கின்றார்கள் . எனவே குறிப்பிட்ட ஓரே ஓரு கடவுளை மட்டும் தான் வழிபட்டே ஆகவேண்டும் என்ற நிலை என்றைக்குமே அருளுலக்கு இல்லை! இல்லை! இல்லை!
இல்லவேஇல்லை!!!

மேலும் பதினெண்சித்தர்களின் அருளுலகத் தத்துவம் தான் மிகமிகத்
தெளிவாக மனிதர்கள் கடவுளாவது
போல்,கடவுள்களும் மனிதர்களாகப்
பிறப்பெடுக்கிறார்கள் என்ற மாபெரும் பேருண்மையினை விளக்குகிறது.

இதன்மூலம்,எப்பொழுதுமே கடவுள்களுக்கிடையில் புதிதாகக்
கடவுளாகிட்ட மனிதர்களும்;
மனிதர்களுக்கிடையில் புதிதாக
மனிதர்களாகப் பிறந்திட்ட கடவுள்களும் இருக்கிறார்கள் என்ற பயன்மிக்க சுவையான பேருண்மை தெளிவாக்கப்படுகிறது.

இதனால் கடவுள்களுக்கும்,மனிதர்களுக்கும் இடையில் மிகமிக நெருக்கமான
உறவுநிலைகளும் உரிமைநிலைகளும் பசுமையாக வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றது என்பது தெளிவாகிறது.இத்தெளிவினால்
கடவுளைப்பற்றிய தவறான கற்பனைகளும்,அச்சங்களும்,
கூச்சங்களும்,ஆச்சரியங்களும்,
மாச்சரியங்களும் அகற்றப்படுகின்றன!
அகற்றப்படுகின்றன!!
அகற்றப்படுகின்றன!!!

🚩ஓம்திருச்சிற்றம்பலம்ஓம்🔱

🌷ஓம் குரு வாழ்க!
⚘ஓம் குருவே எல்லாம்!
🌱ஓம் குருவே துணை!
🙏ஓம் குருவே சரணம்!
💐ஓம் குருவே போற்றி!
🔱சித்தர்நாவல்மரத்தடியார்
கருவூர்
8973441303

Friday, March 12, 2010

சிவராத்திரிச்சிறப்பு


சிவராத்திரி இரவு பற்றிய சித்தர்கள் கூறும் செய்திகள்!
௧.ஆகாயகன்னி கங்கை ஏற்ற இரவாம்
௨.மாக்கடல் கடைந்த இரவாம்!
௩.ஏகாயம்என்னற்றகோடி தோற்றுவித்த இரவாம்!
௪ மூலப்பதினெண்சித்தர்கள் இந்த மண்ணுலகிற்கு
வந்த முதல் இரவு!
௫.இந்த மண்ணுலகில் பயிரினங்களும்,
உயிரினங்களும் தோன்றிய இரவு!
௬.ஆதிசிவனாரின் மகன் முருகப்பெருமான்
தனது 32 வது வயதில் தனது சக்திகளை
18 படைவீடுகளில் நிறைவு செய்ய முடிவு எடுத்த இரவு !
௭.இருக்கு வேதம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு
அசுரவேதம்,அதர்வானவேதம்,சாமவேதம் என்று மூன்றாக
பிரிக்கப்பட்ட இரவு.

Thursday, March 11, 2010

அமராவதியாற்றங்கரைக் கருவூறார் இந்துவேதமுன்னேற்றக்கழகம்

சித்தர் அமராவதியாற்றங்கரைக்கருவூறார்!
காலம்: கிருத்துவிற்கு முன்னால் 100 முதல்
கிருத்துவிற்குப் பின்னால் 150ஆண்டுகள் வரை வாழ்ந்தார்.
பாண்டியமன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின்
அரசகுருவாக இருந்தவர்.

போர்முறையே தெரியாத உயர்ந்த நாகரிகத்தை உடைய
மக்கள் வாழ்க்கைமுறையை உருவாக்கியவர்.

இவரது காலத்தில்தான் இமயமலையில் வாழ்ந்த
பிராகிருத மொழி பேசும் களப்பிறர்களும்,
கங்கை கடலோடு கலக்கும் துறை முகத்தில் வாழ்ந்த
பாலி மொழி பேசும் களப்பிறர்களும் கடல்வழியாக
படை எடுத்துவந்து, மதுரை மாநாகரினை அழித்தனர்.

அப்போது கோவலன் கொலையுண்ட நிகழ்ச்சியும் அன்னிய
படையெடுப்பிற்கு பேருதவியாகியது.

மதுரை எரிந்து சிதைந்ததால் மூன்றாவது மதுரை தமிழ்ச்சங்கத்தின்
மூலம் இவர்தம் காலத்தில் இருந்தஎல்லா தமிழ் நூல்களையும்
கூலவாணிகன் சீத்தலைசாத்தனாரைகொண்டு கரந்தமலையில்
இவரைத் தங்கவைத்து சங்க இலக்கியங்களை தொகுத்திட்டார்.

இவரே சிதம்பரத்தில் உள்ள கூத்தப்பெருமான் சிலையையும்
ஐம்பொன்னால் வார்த்து எடுத்ததாகவும் குறிப்பு உள்ளது.

மூன்றாவது மதுரை தமிழ்ச்சங்கத்தின் மூலம் இவர்தம் காலத்தில்
இருந்த எல்லா தமிழ் நூல்களையும் கூலவாணிகன் சீத்தலைசாத்தனாரை
கொண்டு தொகுத்திட்டார்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,பதினெண்மேல்கணக்கு நூல்கள்,
ஐம்பெரும்காப்பியங்கள்,அண்டபேரண்டத்தமிழ்,...இன்னும் பல
நூல்களை சீத்தலைசாத்தனாரை கரந்தமலையில் தங்கவைத்து சங்க இலக்கியங்களை தொகுத்திட்டார்.

கருவூறார் நிறைவு பெற்றஇடம்:கருவூர்ப் பசுபதீஸ்வரர் ஆலயம்.

இந்துவேத முன்னேற்றக்கழகத்தை தொடங்கியவர்,
அருஉருவச்சித்திபெற்றவர்,
அமராவதியாற்றின் நீரில் தோன்றியவர்.

இவரது காலத்தில் மதுரையை கடல்கோளில் இருந்து
காப்பாற்றவும், மதுரை மூன்றாம் தமிழ் சங்க நூல்களை
காப்பாற்றவும், அதனை பிற்காலத்தமிழ்ச்சமுதாயம்
தெரிந்துகொள்ள உதவியவர்.
தமிழை காக்க இவர் வாழ்ந்தபோது,
பிறமண்ணினரின் சதியால்!
எண்ணிலாத்தமிழர்களின் நாக்கு அறுக்கப்பட்டது,
தமிழ்நூல்கள் எரிக்கப்பட்டதுடன்,
தமிழில் பேசினால் தண்டனை தரப்பட்டது
தமிழர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர்.
சமசுகிருதம் மட்டுமே ஆட்சிமொழியாக கடைப் பிடிக்கப்பட்டது !

காலத்தின் சூழ்ச்சியா!சுழற்ச்சியா!

மீண்டும் மேல குறிப்பிட்டதற்கு சமமான நிகழ்வு
அண்மையில் நிறைவேறியது.

அவரது சமாதுக் கோவிலில் கடந்த எட்டு ஆண்டுகளாக
தமிழ்மொழியில் நடத்தப்பட்ட முழுநிலவு யாகம்,
சுமார் இரண்டு ஆண்டுகளாகநிறுத்தப்பட்டு,
கடந்த மாதம் சம்ஸ்கிருத முறையிலே குடமுழுக்கு நடத்தப்பட்டது !
இதுதமிழின வீழ்ச்சியா ! எழுச்சியா ! சிந்திப்பீர்! தமிழ்ச்சமுதாயமே !

தமிழர் நாகரிகம் மற்றும் தமிழ் வரலாற்றின் கலியுகத்தின் முன்னோடித்தமிழனுடைய வரலாற்று செய்தியை
தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வரலாற்று ஆய்வாளர்களின்
பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றேன்!

Wednesday, March 10, 2010

நாவலடியாண் வரலாறு மெய்யா! பொய்யா!


நாவலடியாண் வரலாறு மெய்யா! பொய்யா!
௧.மண்ணுலகம் தோன்றி ௪௩,௭௩,௧௧௧(43,73,111)
ஆண்டுகளாகியும் இன்றும் அவர் வாழ்வதாக சொல்லப்படுகிறது!
இவரது மொழி தமிழ்!
எத்தனையோ காலமாற்றத்தால் அழியாத இடம்!
இவரது சிறப்பு : மனித வாழ்வியல் விதியை திருத்தும் அதிகாரம் பெற்றவர்
சான்று :மனிதஇனவாழ்க்கை அனுபவங்கள்! மற்றும் அவர் வாழும் இடம்!
பூசைமுறை: கருமுறை
இடம்:மோகனூர்
வேலூர் அருகில்
காவிரியாற்றின் வடகரையில்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.
மனிதவாழ்க்கையை நிர்ணயிப்பது விதியா! மதியா!
இந்தப்புதிருக்குவிடை காலத்தைவென்ற இவரால்தான்
சொல்லமுடியும் என்கிறது செய்தி!
இதனை மனிதகுல ஆய்வுக்காகவும்
தமிழர்நாகரிகமும் ! தமிழ்மொழியும் எத்துனை ஆண்டுகள்
பழமையானது என்பதைஆராயும் தமிழ்ச்செம்மொழி மாநாட்டின்
ஆய்வாளர்களின் சிந்தனைக்குச்சமர்ப்பிக்கின்றேன்!